http://www.nellainetwork.com

Gowtham Pathippagam Publications -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- -- To Order Contact : 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888 -- Email: admin@gowthampathippagam.com
திருநெல்வேலி தகவல்கள்

திருநெல்வேலி சுற்றுலா தகவல்கள்
குற்றாலம் அருவி | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி | முண்டன்துறை



முண்டன்துறை


     தமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை புலிகள் சரணாலயமாகும். திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தூரத்தில் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.

     குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது.

     இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சித்தல் (Chital), கடம்பை மான்கள், காட்டுப் பன்றிகள், சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.

     இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன.

     வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் (டிரெக்கிங்) ஈடுபடலாம். காட்டுக்குள் தங்கு வதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாச முத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு.


இணைய பக்க முகவரி: http://www.nellainetwork.com/tourism/mundanthurai.html


குற்றாலம் அருவி | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி | முண்டன்துறை




ஆன்மீகம்
தினசரி தியானம்