http://www.nellainetwork.com

Gowtham Pathippagam Publications -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- -- To Order Contact : 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888 -- Email: admin@gowthampathippagam.com
திருநெல்வேலி தகவல்கள்

திருநெல்வேலி பொது தகவல்கள்
மாநகர தகவல்கள் | மாநகர வரைபடம்



திருநெல்வேலி மாநகர தகவல்கள்

     திருநெல்வேலி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும். திருநெல்வேலி, "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு" என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி" என்று கம்பரும் பாடிய பூமியாகும்.

     திருநெல்வேலி 8.73oவடக்கு 77.7oகிழக்காக அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.

     நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலி நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது. ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால் அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் வழங்கப்படுவதாகவும் கூறுவர்.

     தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

     திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வெலி மற்றும் தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.

     திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது "திருநெல்வேலி அல்வா" தான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான்.

     பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

     இம்மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஊர்கள் குற்றாலம், திருச்செந்தூர், சங்கரன்கோவில், வீரவநல்லுர், பாபநாசம், கழுகுமலை, தென்காசி, புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம், மணப்பாடு, கிருஷ்ணாபுரம், பத்தமடை, பத்தமடை, எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, மாஞ்சோலை, கும்பாவுருட்டி அருவி (பாலருவி), கடையம் ஆகும்.

     தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு சபைகள்

சித்ர சபை - திருக்குற்றாலம்
தாமிர சபை - திருநெல்வேலி

முப்பீட தலங்கள்

அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில்

பஞ்ச ஆசன தலங்கள்:

ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
விஜயநாராயணம் - மனோன்மணீசர் திருக்கோயில்
செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்:

சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை - காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம்



இணைய பக்க முகவரி: http://www.nellainetwork.com/general/cityinfo.html


மாநகர தகவல்கள் | மாநகர வரைபடம்




ஆன்மீகம்
தினசரி தியானம்